காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள்

காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள்

1 mins read
d38b558a-da69-4455-ad61-72534026d967
-

ஸ்ரீநகர்: ஊர்வலத்தின்போது ஷியா முஸ்லிம்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போல் கடும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முஹர்ரமை ஒட்டி நேற்று முன்தினம் மாலையில் அங்கு ஷியா முஸ்லிம்கள் சமய ஊர்வலம் சென்றனர். அப்போது கூட்டத்தினருள் சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டையும் 'பெல்லட்' குண்டுகளையும் பயன்படுத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த மோதலில் உள்ளூர்வாசிகள் 12 பேரும் பாதுகாப்புப் படை வீரர்கள் அறுவரும் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் பாகிஸ்தான் வன்முறையைத் தூண்டுவதாக இந்தியா குற்றம் சாட்டியிருக்கிறது. காஷ்மீர் இந்தியாவைவிட்டுப் பிரிவேண்டும் என்று விரும்பிய பாகிஸ்தான், நடந்தது குறித்து கோபத்தில் ஆழ்ந்திருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்களான அஜித் டோவால்.