கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்த 90 தெரு நாய்கள்; போலிஸ் விசாரணை

கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்த 90 தெரு நாய்கள்; போலிஸ் விசாரணை

1 mins read

மும்பை: மஹாராஷ்டிரா புல்தானா மாவட்டத்தில் கால்கள் கட்டப்பட்டு 90 தெரு நாய்கள் இறந்து கிடந்ததை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

கிர்தா-சவல்டபாரா சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களில் நாய்களின் உடல்கள் வீசப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் கூறினர்.

"சாலையில் ஐந்து இடங்களில் நூற்றுக்கும் ேமற்பட்ட நாய்கள் வீசப்பட்டிருந்தன. இவற்றில் 90 நாய்கள் இறந்துகிடந்தன.

"சில நாய்களுக்கு இன்னும் உயிர் இருந்தது," என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கடுமையான தூர்நாற்றம் வீசியதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

"நாய்களின் சடலங்களைக் கண்டுபிடித்த கிராம மக்கள் போலிசாரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகளும் போலிசாரும் உயிரோடு இருந்த நாய்களை அவிழ்த்துவிட்டனர்," என்று மேலும் அவர் தெரி வித்தார்.

இதற்கிைடயே வனக் காவலர் இது குறித்து முறைப்படி புகார் அளித்துள்ளதால் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.