‘குக்கர் வெயிட்’ கண்ணுக்குள் புகுந்து மூளையைத் தொட்டதில் பெண்ணின் பார்வை பறிபோனது

சமைக்கும்போது பிரஷர் குக்கரின் வெயிட் கண் வழியாகப் புகுந்து  மூளைக்கு அருகில் சென்றதால் 57 வயது பெண் ஒருவரின் இடது கண் பார்வை பறிபோனது. 

ஜார்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியை சேர்ந்த முண்டா பிர்சி எனும் மாது பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்துவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். 

குக்கர் பலமுறை சத்தம் கொடுத்தது அவருக்குக் கேட்வில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, சமையலறைக்குச் சென்ற பிர்சி அடுப்பில் இருந்து குக்கரை கீழே இறக்கி வைத்தார்.  

அப்போது அழுத்தம் காரணமாக குக்கரின் வெயிட் பறந்து, எதிர்பாராத விதமாக பெண்ணின் இடது கண்ணில் புகுந்தது.

மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது முகத்தில் குக்கர் வெயிட்டை காண முடியவில்லை. பின்னர் ‘ஸ்கேன்’ செய்தபோது அது முழுவதுமாக உள்ளிறங்கி மூளைக்கு அருகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து மருத்துவர்கள் அந்த வெயிட்டை பெண்ணின் தலையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். எனினும் அந்தப் பெண்ணின் இடது கண் பார்வை பறிபோனது.