புதுடெல்லி: போத்தல் தண்ணீர் விற்கும் பெப்சி, கோக்க கோலா போன்ற நிறுவனங்கள், சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக வேறு வழிகளில் தண்ணீரை அடைத்து விற்கவேண்டும் என்று உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் போத்தலுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்பதால் இன்றைக்குள் தண்ணீரை அடைத்து விற்பதற்கான மாற்று வழிகள் குறித்த ஆலோசனைகளை அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் இறுதி முடிவை அரசாங்கம் எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெப்சி, கோக்க கோலாவுக்குக் கெடு
1 mins read

