முதல் பழங்குடிப் பெண் விமானி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல் அதிகம் நிறைந்த பகுதி. அந்த மாவட்டத்தில் வாழும் சந்தால் எனும் பழங்குடி இனத்தில் இருந்து பெண் ஒருவர் விமானியாகி சாதனை படைத்துள்ளார். அனுப்பிரியா லக்ரா, 23, என்ற இந்தப் பெண், இம்மாதத் தொடக்கத்தில் ‘இண்டிகோ’ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் இணை விமானியாகச் சேர்ந்தார். போலிஸ் காவலரின் மகளான இவருக்குச் சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. 2010ல் பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர், பின்னர் இடையிலேயே அதை நிறுத்திவிட்டு, விமானி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். விடாது முயன்று கனவை நனவாக்கிய இவருக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.