வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு,  அவரது மகனுடன்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் முதல்வர் ஒய். எஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக நிகழவிருக்கும் போராட்டத்தில் இவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நாள் ஜனநாயகத்திற்கே இருள்மிக்க நாள்,” என்றார் திரு சந்திரபாபு.

அரசாங்கம் மனித உரிமைகளை மீறி வருகிறது. நான் அரசாங்கத்தை எச்சரிக்கிறேன். போலிசாரையும் நான் எச்சரிக்கிறேன். கைதின் மூலம் நாங்கள் கட்டுப்படமாட்டோம்,” என்று அவர் தனது வீட்டில் கூடியிருந்த செய்தியாளர்களிடம்  ஆவேசமாகத் தெரிவித்தார்.