புதுடெல்லி: கூடுதல் எடை மற்றும் விதிகளை மதிக்காதது ஆகியவற்றுக்காக ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பகவான் ராம் என்பவருக்கு ரூ. 1,41,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட ரசீதை (படம்) ஏஎன்ஐ செய்தி நிறுவனம் புகைப்படம் எடுத்து டுவிட் செய்துள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் அதிக அபராதம் செலுத்திய நபர் இவர் ஆவார்.
முன்னதாக, ஒடிசாவில் போக்கு
வரத்து விதிகளை மீறிய லாரி ஓட்டுநருக்கு 86,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

