அறுபது வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று விவசாயிகளுக்கான ‘பிரதம மந்திரி கிசான் மந்தான் யோஜனா’ திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அறுபது வயதானதும் எல்லா விவசாயிகளுக்கும் மாதம் 3,000 ரூபாய் கிடைக்கும் என்று அறிவித்தார்.

விழா மேடையில் இந்தத் திட்டத்தில் பயன் அடையும் விவ சாயிகளுக்கு பிரதமர் மோடி அடையாள அட்டைகளை வழங் கினார்.

இதற்காக மாநிலங்களில் இருந்து விவசாய பிரதிநிதிகள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் சார்பில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சத்திய நாராயணன் விழாவில் பங்கேற்று பிரதமரி டமிருந்து அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் பலன் அடைவார்கள். அவர்களின் வயதுக்கு ஏற்ப மாதந்தோறும் பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும். 

உதாரணமாக 18 வயது விவசாயிகள் மாதந்தோறும் ரூ.55 செலுத்த வேண்டும். 19 வயது முதல் 40 வயது வரை விவ சாயிகளின் மாதாந்திர பங்களிப்புத் தொகை வயதுக்கு ஏற்ப அதி கரிக்கும்.

மேலும் விவசாயிகள் எந்த அளவுக்கு பங்களிப்புத் தொகை செலுத்துகின்றனரோ அதே அளவுக்கு சமமான தொகையை மத்திய அரசு வழங்கும். 

அதாவது விவசாயி மாதாந்திர பங்களிப்புத் தொகையாக ரூ.100 செலுத்தினால் மத்திய அரசும் அவருக்கு ரூ.100 பங்களிப்புத் தொகை வழங்கும்.

விவசாயிகள் 60 வயதை எட்டி யதும் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். 

எல்ஐசி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளை இத் திட்டத்தில் சேர்க்க வேளாண் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Loading...
Load next