கழுத்துவரை உயரும் ஆற்றுநீரைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் ஆசிரியை 

 

கடமையைக் கண்ணாகக் கருதும் பள்ளி ஆசிரியை பிநோதினி சமல், கழுத்துவரை உயரும் ஆற்றுநீரைக் கடந்து ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்கிறார்.

திருவாட்டி சமல் கற்பிக்கும் பள்ளிக்கூடத்தில் 53 மாணவர்கள் பயில்கின்றனர். பருவமழையால் மட்டுமீறிய சபுவா ஆற்றுநீரைக் கடந்து சென்றுதான் அவர் தமது வேலை இடத்தை அடைய முடியும். ஆற்றில் தண்ணீர் அதிகம் ஓடும் நாட்களில் ஆசிரியர்கள் பலர் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில், எப்பாடு பட்டாவது பள்ளிக்குச் சென்றே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்வார் திருவாட்டி சமல்.

“என்னைப் பொறுத்தவரை, மற்றதைவிட எனக்கு வேலைதான் முக்கியம்,” என்கிறார் 49 வயது சமல். தொடக்கத்தில் 1,700 ரூபாயாக மட்டுமே இருந்த அவரது சம்பளம் தற்போது மாதத்திற்கு 7,000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.