பிள்ளையார் சிலையைக் கரைக்கச் சென்ற சிலர் மரணம், பலர் மாயம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளபக்தவார்பூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை கிராம மக்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு  அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்க சென்றனர். 

அப்போது சிலையைக் கரைக்க ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சிலர் சென்றதால் ஆற்றின் நீரோட்டத்தின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பிள்ளையார் சிலை கரைக்கும் போது அடித்துச்செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

முன்னதாக, பிள்ளையார்  சிலை கரைப்பின்போது மாநிலம் முழுவதும் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்திருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான பிள்ளையார் ஊர்வலம் நடைபெற்றது. 

நகரம் முழுவதும்  பிள்ளையார்  சிலைகள் நேற்று  முன்தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்பட்டன.

நேற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பிள்ளையார்  ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது. மும்பையில் மட்டும்  3,800 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. 

சிலைகளை நீர்நிலைகளின் ஆழமான பகுதியில் கரைக்கும்போதும் குளிக்கும்போதும் எதிர்பாராதவிதமாக பலர் தண்ணீரில் விழுந்துள்ளனர். சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு