கறுப்புப் பட்டியலிலிருந்து 312 சீக்கியர்கள் பெயர் நீக்கம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வந்தது. 1980ஆம் ஆண்டு இது தொடர்பாக நடந்த கலவரத்தின் போது சீக்கியர்கள் பலர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

அவர்களில் 314 பேர் இந்தியாவுக்குள் நுழைய முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் மத்திய அரசு இணைத்திருந்தது. இந்நிலையில், பலகட்ட ஆய்வுக்குப் பிறகு கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 314 பேரில் 312 சீக்கியர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால் தடை காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் சீக்கியர்கள் இனி இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்ப உறவினர்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.