திருப்பதி: அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் உட்பட 63 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நலமல்லா வனத்தில் யுரேனியம் வெட்டி எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பத்ரா, தேவரகொண்டா கம்பஜ்பல்லி பகுதிகளில் அணு ஆற்றல் துறை மற்றும் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் 4,000 பரிசோதனைக் குழிகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதிகளுக்குச் செல்ல நலமல்லா பகுதி, தெலுங்கானாவின் அமராபாத் வனப்பகுதி ஆகியவற்றில் வசிக்கும் பழங்குடியினருக்கு நேற்று முன்தினம் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இந்தப் போராட்டம் வெடித்தது.
யுரேனியம் வெட்டி எடுக்க ஆந்திராவின் நலமல்லா பழங்குடியினர் எதிர்ப்பு
1 mins read