பெங்களூரு: கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள புக்கசாகரா கிராமத்தில் கரடி ஒன்று தாக்கியதில்
50 வயதான ராஜண்ணா என்பவர் கடும் காயமுற்றார். பெங்களூருவில் உள்ள நிம்ஹன்ஸ் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார். அவரைக் கரடியிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தளவாய்க்கேட்டே எனும் கிராமத்தைச் சேர்ந்த லஷ்மண், உமேஷ், ஷாஷி, ரமேஷ் ஆகிய நால்வரும் கடும் காயமுற்றனர். ஐம்பதுக்கும் அதிகமான போலிசார்,
20 வனத்துறை அதிகாரிகள் சேர்ந்து கரடியைப் பிடித்தனர்.

