புதுடெல்லி: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கிண்ணங்கள், பைகள், தட்டுகள், சிகரெட் துண்டுகள், கொடிகள், பலூன்கள், மெழுகுவர்த்திகள், குளிர்பான பாட்டில்கள், 100 மைக்ரானுக்கு குறைவான சாலையோரம் வைக்கப்படும் பேனர்கள் போன்ற 12 பொருட்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை 2022ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
12 பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய முயற்சி
1 mins read

