திருச்சூரில் 300 கலைஞர்களுடன் களைகட்டிய 'புலிகாலி'

திருச்சூரில் 300 கலைஞர்களுடன் களைகட்டிய 'புலிகாலி'

1 mins read
eb2706e1-0eb9-40e1-a778-a55e6e55346b
-

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவின் கொண்டாட்ட நிறைவாக நேற்று திருச்சூரில் புலிகாலி எனும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, செண்டமேளம் ஆகியன இடம்பெற்றன. இவ்வாண்டு புலிகாலி நிகழ்ச்சியில் மொத்தம் ஆறு குழுக்களைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். புலிமுகத்தை வயிற்றிலும் கை, கால்களில் புலியின் உடலிலுள்ள கோடுகளையும் வரைந்து கலைஞர்கள் நடனமாடுவர். இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் குழுவுக்கு 40,000 ரூபாயும் அடுத்த இரண்டு நிலைகளில் வரும் குழுக்களுக்கு 30,000 மற்றும் 25,000 பரிசாக வழங்கப்படும். வேறு பரிசுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். நேற்று காலையிலிருந்தே கலைஞர்கள் உடலில் சாயம் பூசிக்கொள்ளத் தொடங்கினர். ஒரு சிறுவனுடன் உரையாடும் கலைஞர்கள்.

படம்: ஏஎஃப்பி