திமுக இந்தி எதிர்ப்புப் போர் பிரகடனம்

திமுக இந்தி எதிர்ப்புப் போர் பிரகடனம்

2 mins read
4f3e0de2-0e92-41c3-b16e-3318b568c72f
இந்தி- இந்தியா இதில் இந்தியாதான் எங்களுக்கு வேண்டும்- இந்தி தேவை இல்லை என்கிறோம். இந்தி திணிப்பு என்பது ஒரு கலாசார படையெடுப்பு. திமுக நடத்தப் போகும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அத்தனை தமிழர்களும் பங்கேற்க வேண்டும். அன்று 1938-ல் தொடங்கிய மொழிப்போர் மீண்டும் 2019-லும் நடத்துகிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று கூறினார் திமுக தலைவர் ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களால் அசைக்கமுடியாத அளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், மறுபடியும் அதே பிரச்சினையை இப்போது கையில் எடுக்கிறது.

புதிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் தயாராகும்படி கட்சித் தொண்டர்களைத் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

திராவிட சித்தாந்தவாதி என்று கருதப்படும் சி.என் அண்ணாதுரையின் 111வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகெண்ட ஸ்டாலின், அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று கூறியதை தனக்கு அனுகூலமான அரசியல் வாய்ப்பாக எடுத்துக்கொண்டார்.

மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலை இன்னும் பலப்பட இந்தி எதிர்ப்பு உணர்வை ஒரு வியூகமாக ஸ்டாலின் வகுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

"இந்தி திணிப்பைத் தடுக்க எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

"மாணவர்கள், இளையர்கள் உள்ளிட்ட தமிழர்கள் அனைவரும் இப்போதே, இங்கேயே சூளுரைப்போம். அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள எல்லாரும் இங்கேயே உறுதி தெரிவிப்போம்," என்றார் ஸ்டாலின்.

முன்னதாக சென்னையில் மதிமுக ஏற்பாடு செய்த ஒரு கூட் டத்தில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசுக்கு எதிரான வலுவான, ஐக்கியமான எதிர்த்தரப்பு பிரசாரத்திற்குத் தளத்தை வகுத்துக்கொடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்காவும் இந்தியை எதிர்த்து குரல்கொடுத்தார். 1960களில் நிலவியதைப் போன்ற ஓர் உணர்வு மதிமுக கூட்டத்தில் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

1960களில் மிகவும் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சியை, திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக அகற்றியது. இந்தி எதிர்ப்பும் அதற்கு உதவியது.