பெங்களூரு: அடிக்கடி வெளிநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, கர்நாடகாவுக்கு வருகை தந்து, வெள்ளத்தில் சிக்கிய மக்களின் சிரமங்களைக் கேட்காதது வேதனை அளிப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மைய மழை வெள்ளத்தால் கர்நாடகாவில் ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"தற்போது பிரதமர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வாங்கிய கடனைச் செலுத்தும்படி விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன.
"மனிதநேயம் என்று ஒன்று இருந்தால் மாநில அரசு, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்," என்றார் சித்தராமையா.
கர்நாடகாவில் தற்போது கோழை அரசு அமைந்திருப்பதாக விமர்சித்த அவர், மத்திய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தும் தைரியம் மாநில அரசுக்கு இல்லை என்றார்.
இதற்கிடையே, பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் எடியூரப்பா 10 முறை முயற்சி மேற்கொண்ட போதிலும் சந்திப்பு சாத்தியமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இத னால் அம்மாநில பாஜகவில் குழப்பம் நிலவுகிறது.

