'தேசத் தந்தை மோடி' சர்ச்சையில் சிக்கிய முதல்வர் மனைவி

'தேசத் தந்தை மோடி' சர்ச்சையில் சிக்கிய முதல்வர் மனைவி

1 mins read
1c601613-c3d1-4ba8-b8d9-aaf116000727
முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா. படம்: ஊடகம் -

மும்பை: "தேசத் தந்தை நரேந்திர மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நாட்டின் நன்மைக்காக இடைவிடாமல் பணியாற்றுகிறார்," என்று மோடிக்கு வாழ்த்துக்கூறி சிக்கலில் மாட்டியுள்ளார் மகாரா‌ஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா. பிரதமரை தேசத் தந்தை என அம்ருதா குறிப்பிட்டதை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில்

காங்கிரசின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மகாத்மா காந்தி மட்டுமே நமது தேசத்தந்தை. பெருமைக்காக சிலர் மோடியைத் தேசத்தந்தை என அழைக்கலாம். அது அவர்களின் விருப்பம்," என்றார்.