இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த மூதாட்டி மீண்டும் மருத்துவமனையில்

ஆந்திரப் பிரதேசம்:   இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த 74 வயது மூதாட்டி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண், ‘ஐவிஎஃப்’ செயற்கைக் கருத்தரிப்பு முறையின் உதவியுடன் ஆரோக்கியமான இரண்டு பெண் குழந்தைகளை அண்மையில் பெற்றெடுத்தார். குழந்தைகள் பிறந்தபோது அனைவரும் எந்தப் பிரச்சினையுமின்றி நலமுடன் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்தத் தாயாருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளின் 82 வயது தந்தைக்குச் சில நாட்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டது.