புத்தி சொல்லப்போன டிராஃபிக் ராமசாமிக்கு ஏற்பட்ட கதி

புத்தி சொல்லப்போன டிராஃபிக் ராமசாமிக்கு ஏற்பட்ட கதி

1 mins read
15b9caf9-d933-4e13-abea-409f42b8f0ac
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஊழல் முதல் சாலைகளில் பதாகைகள் வைப்பதுவரை பலவற்றையும் எதிர்த்து தனி மனிதராகப் போராடி வருகிறார். புத்தி சொல்ல போன தன்னை ஒருவர் மோதித்தள்ள முயன்றதை எதிர்த்து அவர் சாலையில் படுத்து போராடினார். படம்: தமிழக ஊடகம் -

திருப்பூர்: விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ள திருப்பூர் சென்ற சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, பல்லடம் ரோட்டில் பலரும் சட்டவிரோதமாக வாகனத்தில் சென்றதைக் கண்டு சாலை விதிகளை அவர்களுக்குப் போதித்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், டிராபிக் ராமசாமி மீது மோதுவதுபோல் வேகமாக வந்து பிறகு தப்பி ஓடிவிட்டார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டிராபிக் ராமசாமி, அந்த வாகன ஓட்டியைப் பிடித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டு சாலையில் படுத்து போராட்டத்தைத் தொடங்கினார்.

அதைப் பார்த்த சிலர் போக்குவரத்துப் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். போலிசார் வந்து அமைதிப்படுத்தினார்கள்.

அதனை அடுத்து தனது போராட்டத்தை முடித்துக்கொண்ட டிராஃபிக் ராமசாமி, தொடர்ந்து பலருக்கும் போதித்தபடியே தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

டிராஃபிக் ராமசாமியைப் பார்த்த துமே பலரும் தலைக்கவசத்தை அணிந்துகொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். சிலர் அவரைப் பாராட்டினர். சிலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.