புதுடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய மாபெரும் பேரணி

புதுடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய மாபெரும் பேரணி

1 mins read
c9d7e9c5-72f0-4c67-9765-a51ebddcf0df
ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நொய்டாவிலிருந்து புதுடெல்லி வரை பேரணி நடத்தினர். படம்: ஏஎஃப்பி -

விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும், கரும்பு நிலுவைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும், இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி

யுறுத்தி இந்தியத் தலைநகர் புதுடெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து இம்மாதம் 11ஆம் தேதி விவசாயிகள் ராஷ்டிரிய கிஷான் சங்கத்தின் கீழ் இந்தப் பேரணியைத் தொடங்கினர்.

வேளாண்துறை அமைச்சகம், பாரத் கிசான் யூனியனுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, நொய்டா

விலிருந்து நேற்று மீண்டும் பேரணியைத் தொடங்கினர்.

இந்நிலையில், டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாக, மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எல்லாவற்றையும் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துள்ளோம். நீங்களே பார்க்க முடியும். அவர்கள் இங்கு வந்ததும், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடுத்துவோம். பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம், என்று தெரிவித்துள்ளார். பேரணி முடிந்த பின்னும் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், அடுத்து உண்ணாவிரதம் இருக்கவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.