மலர்க்கொத்தால் மகிழ்வித்த மோடி

மலர்க்கொத்தால் மகிழ்வித்த மோடி

1 mins read
132c72c7-547c-401c-86b8-bd010a678f37
-

ஹியூஸ்டன், டெக்சஸ்: 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியை முன்னிட்டு அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தரையிறங்கியதும் அங்குள்ள அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

திரு மோடியை வரவேற்க அமெரிக்காவின் வர்த்தக, அனைத்துலக விவகார இயக்குநர் கிறிஸ்டபர் ஓல்சன், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் ஹியூஸ்டன் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். திரு மோடிக்கு மலர்க்கொத்துகள் கொடுக்கப்பட்டபோது அவற்றில் ஒன்று தரையில் விழுந்ததை காணொளிகள் காட்டின. கீழே விழுந்த மலரைக் குனிந்து எடுத்து திரு மோடி அதனை உதவியாளர் ஒருவரிடம் கொடுத்ததையும் கேமராக்கள் படமெடுத்தன.

திரு மோடியின் இந்தச் செயலை இணையவாசிகள் பலர் பாராட்டியுள்ளனர். தமக்கு மரியாதை அளித்தவர்களுக்குப் பதில் மரியாதையை அவர் கொடுத்ததாகவும் மலர் போன்ற தாவரங்களை அவர் மதிப்பதாகவும் மோடியின் ஆதரவாளர்கள் டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் பாராட்டு மழை பொழிந்தனர்.

அமெரிக்காவுக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டுள்ள திரு மோடி,' ஹாவ்டி மோடி' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டேனல்ட் டிரம்ப்புடன் இணைந்து உரையாற்றுவார். எரிசக்தித் துறையைச் சேர்ந்த முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.