இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடலோரக் காவற்படையினர், மியன்மாரைச் சேர்ந்த அறுவரை கைது செய்திருக்கின்றனர். மியன்மாருக்கு அருகிலுள்ள நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சந்தேகத்திற்குரிய அந்தக் கப்பலைக் கண்டிருந்த அதிகாரிகள் அதனை இடைமறித்ததாகத் தகவல் வெளிவந்தது.
இந்தியாவின் பிரத்தியோக பொருளியல் வட்டாரத்தில் பிடிப்பட்ட அந்தப் படகில்1,160 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
படகின் பணியாளர்கள் எந்த வானொலி அழைப்புகளுக்கும் பதில் கூறாததால் கடலோரக் காவற்படையினர் படகில் ஏறினர்.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கெட்டமின் என ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

