மூன்றாண்டாகத் தேடப்பட்ட தீவிரவாதி அதிரடியாக கைது

மூன்றாண்டாகத் தேடப்பட்ட தீவிரவாதி அதிரடியாக கைது

1 mins read
65d39ab9-bb30-4051-9702-67423f436b87
அல்காய்தா தீவிரவாதி எனக்கூறப்படும் முகமது கலிமுதின் முஜாஹிரி -

ராஞ்சி: ஜார்க்கண்ட் தீவிரவாதத் தடுப்புப் படையினரால் மூன்றாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அல்காய்தா தீவிரவாதி எனக்கூறப்படும் முகமது கலிமுதின் முஜாஹிரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நகர் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் காலிமுதின் சென்றபோது அவரிடம் போலிசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரின் பேச்சு சந்தேகம் எழுப்பவே போலிசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

இதுகுறித்து தீவிரவாதத் தடுப்பு சிறப்புப் படையின் கூடுதல் இயக்குநர் போலிஸ் டிஜிபி முராரி லால் மீனா நிருபர்களிடம் கூறுகையில், "அல்காய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தீவிரவாதி முகமது கலிமுதின் முஜாஹிரி இந்தியா மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா, பங்ளாதேஷ், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி வந்தார்.

"அதுமட்டுமல்லாமல் இந்திய இளைஞர்கள் பலரை மூளைச்

சலவை செய்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று தீவிரவாதப் பயிற்சி அளித்து வந்தார்.

"ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த கலிமுதின் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

"இவரின் உதவியாளர்கள் முகமது அப்துல் ரஹ்மான், அப்துல் சமி என்கிற உஜ்ஜிர் ஹசன் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்றார் அதிகாரி.