சாப்பாட்டுத் தட்டில் மனித மூளை

சாப்பாட்டுத் தட்டில் மனித மூளை

1 mins read
ba54cd3f-2e8e-4ec4-9977-2b11608bcfd7
-

கொலை ஒன்றைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் குண்டர் கும்பல் உறுப்பினரை மர்ம நபர்கள் இருவர் கொடூரமாகக் கொன்றனர். மாண்ட அந்த 24 வயது ஆடவர், தமிழகத்தில் ஒரு குண்டர் என்று கூறப்படுகிறது. மற்றொரு குண்டரைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் அவர் விசாரிக்கப்படுகிறார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், வீட்டில் இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவ்விருவர் கையில் கத்திகளுடன் திடீரென நுழைந்தனர்.

பதற்றமடைந்த அந்த ஆடவர் தப்பியோட முயன்றனார். ஆனால் வந்திருந்த குண்டர்கள் இருவரும் அவரை மடக்கிப் பிடித்து கத்திகளால் வெட்டிச் சாய்த்தனர். அந்தக் குண்டர்களின் ரத்தப் பசி அத்துடன் அடங்கவில்லை. மாண்ட ஆடவரின் மண்டை ஓட்டை உடைத்து அவரது மூளையை வெளியே எடுத்த அந்தக் குண்டர்கள், அந்த மூளையை அவரது சாப்பாட்டுத் தட்டில் வைத்துவிட்டுச் சென்றனர்.