'சோனியா, மன்மோகனுக்கு கடமைப்பட்டுள்ளோம்'

'சோனியா, மன்மோகனுக்கு கடமைப்பட்டுள்ளோம்'

1 mins read

புதுடெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தை ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப்பேசியது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. எங்கள் குடும்பம் அவர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 21ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 3ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மீண்டும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சிதம்பரம் பிணை மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ேநற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரம் விளக்க மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "நான் எம்.பி.யாக இருக்கிறேன். பொறுப்புமிக்க குடிமகன்.பிணை கிடைத்தால் நான் வெளிநாடு செல்லமாட்டேன். வெளிநாடு தப்பிவிடுவேன் என்று சி.பி.ஐ. சொல்வது முற்றிலும் தவறானது," என்று கூறியுள்ளார்.