பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் டெல்லி சென்ற எடியூரப்பா அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம் உள்பட 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

