தசரா யானை காலில் ஆணி குத்தி அவதி

தசரா யானை காலில் ஆணி குத்தி அவதி

1 mins read
d5a268c5-7194-4d22-b157-ff2b09fd58d0
படம்: ஊடகம் -

மைசூரு: மைசூரு அரண்மனை வளாகத்தில் நடந்த ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகையின்போது தசரா யானை காவேரியின் காலில் ஆணி குத்தியது. அந்த ஆணியை பாகன்கள் அகற்றினர்.

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 29ஆம் தேதி முதல் அடுத்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதிவரை 10 நாட்கள் நடக்கிறது. மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் 8ஆம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு முகாம்களில் இருந்து 14 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன.

படம்: ஊடகம்