500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கிறார்கள்: ராணுவ தலைவர் தகவல்

500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கிறார்கள்: ராணுவ தலைவர் தகவல்

2 mins read

பாகிஸ்தானில் நன்கு பயிற்சி பெற்ற 500 பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஊடுருவலைத் தடுத்து நிறுத்த ராணுவம் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் ராணுவம் தடுத்து நிறுத்தும் என்றும் அவர் நேற்று முன்தினம் கூறினார்.

"இந்தியாவின் மேற்குப் பகுதி அண்டை நாட்டில் அரசாங்கப் பயிற்சி பெற்ற பயங்கரவாதமும் பயங்கரவாதிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை நிகழ்த்த ஊடுருவ இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

"எனவே அனைத்துலக எல்லையிலும் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகிலும் கூடுதல் படை குவிக்கப்பட்டு உள்ளது," என்று திரு ராவத் கூறினார்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஏற்கெனவே ஜம்மு காஷ்

மீருக்குள் ஊடுருவி இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கழகத்தில் இளம் தலைவர்கள் பயிற்சிப் பிரி வைத் தொடங்கிவைத்த திரு ராவத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தின் ஆகாய வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத பயிற்சி முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கி இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். தேவைப்பட்டால் "பாலகோட்டைத் தாண்டியும் சென்று தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது. அது ஓர் உத்தேச நடவடிக்கை," என்றார் திரு ராவத்.

பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்

மீரின் புல்வாமா பகுதியில் மத்திய ஆயுதப் படை போலிஸ் மீது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கர

வாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் 40 போலிசார் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பதிலடியாக அதே மாதம் 26ஆம் தேதி பாலகோட்டில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய ஆகாயப் படையின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. அந்த முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் சிறப்புத் தகுதியை இந்தியா நீக்கியதால் வெறுப்பு அடைந்திருக்கும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மறைமுகப் போர் நடத்த முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.