ஸி வருகை; மாமல்லபுரத்தில் சிறிய கடைகள் அகற்றம்

ஸி வருகை; மாமல்லபுரத்தில் சிறிய கடைகள் அகற்றம்

1 mins read
68e02e33-4212-4f11-8f04-1dfb54f9ab74
மாமல்ல புரத்தில் உள்ள இந்த உருளைப் பாறையைக் கண்டு வியந்த சீன உயர் அதிகாரிகள் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: இந்திய ஊடகம் -

மாமல்லபுரம்: பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் மாமல்லபுரத்தில் உள்ள 100 சிறிய கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள். இரு தலைவர்களும் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம் போன்றவற்றைச் சுற்றிப் பார்க்கவிருக்கின்றனர். இதனால் அந்த இடங்களில் சாலையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட சிறு கடைகள், இளநீர் கடை போன்றவை அகற்றப்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை கடைகள் வைக்கக் கூடாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே மாமல்லபுரத்துக்கு வந்துள்ள சீன நாட்டு உயர் அதிகாரிகள், வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வியந்தனர். சீன அதிபர் ஸியின் வருகையை முன்னிட்டு சீன அதி காரிகள் சிற்பங்கள் உள்ள பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். இந்த நிலையில் சரிவான தளத்தில் உள்ள உருண்டை பாறை நிலநடுக்கம் புயல் என இயற்கை பேரிடரிலும் கீழே சரிந்து உருளாமல் இருப்பதைக் கண்டு சீன உயர் அதிகாரிகள் வியந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.