'பாகிஸ்தானுடன் பேசலாம்; ஆனால் பயங்கரவாதிகளுடன் பேச முடியாது'

'பாகிஸ்தானுடன் பேசலாம்; ஆனால் பயங்கரவாதிகளுடன் பேச முடியாது'

1 mins read
dc646362-a2bb-49aa-ac46-306d84fcdcd5
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் -

நியூயார்க்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க்கில் நடைபெற்ற கலாசார அமைப்பான ஆசியா சொசைட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு, லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க முடிவு செய்தபோது பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஓர் எதிர்வினையை இந்தியா எதிர்பார்த்தது.

இப்போதுள்ள எங்கள் எல்லைகளுக்குள் இதை மறுவடிவமைக்கிறோம்.

இது பாகிஸ்தானிடமிருந்து ஓர் எதிர்வினையை ஈர்த்தது, அது சீனாவிடமிருந்து வேறு ஓர் எதிர்வினையை ஈர்த்தது. இவை இரண்டும் வேறுபட்ட எதிர்வினைகள்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, காஷ்மீர் பிரச்சினையைச் சமாளிக்கப் பயங்கரவாதத்தை முழுவதும் உருவாக்கிய நாடு என்று நான் நினைக்கிறேன்.

என் பார்வையில், அவர்கள் அதை இந்தியாவுக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றி பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானுடன் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் 'டெரரிஸ்தானுடன்' பேச முடியாது எனக் கூறினார்.