வெள்ளத்தில் மூழ்கிய புனே நகரம்; 10,000க்கும் மேலானோர் மீட்பு

வெள்ளத்தில் மூழ்கிய புனே நகரம்; 10,000க்கும் மேலானோர் மீட்பு

1 mins read
5720818e-183b-4052-b6bb-7540288be80d
வெள்ளத்தில் சிக்கிய காரிலிருந்து ஒருவரை மீட்கும் மீட்புக்குழுவினர். படம்: இந்திய ஊடகம் -

மும்பை: கனமழை காரணமாக புனே நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இரு தினங்களுக்கும் மேலாக நீடித்த கனமழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை மாலை வரை கன மழை பெய்தது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக 1000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அர்னேஷ்வர் பகுதியில் வீட்டுச் சுவர் இடிந்து விழந்த சம்பவத்தில் ஒன்பது வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதே போல் வெவ்வேறு சம்பவங்களில் மேலும் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.

அர்னேஷ்வர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

வியாழக்கிழமை மதியம் மழை சற்றே ஓய்ந்திருந்தது. எனினும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.