திருவனந்தபுரம்: தமிழகம் மற்றும் கேரளா இடையேயான நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாகவும், இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பர் என்றார் அவர்.

