தனது ஆறு வயது மகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட இயலாத தந்தை, அவளது கழுத்தை நெரித்துக்கொன்றதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஹர்யானா மாநிலத்தின் குருஷேத்திர மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்ற அந்த ஆடவர், இரண்டு மாதங்களாக வேலையில் இல்லாத காரணத்தால் தனது மகளின் பள்ளிக் கட்டணத்தைச் சமாளிக்க இயலவில்லை என்று போலிசார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாயாருக்கு முன்னரே ஜஸ்பீர் சிங் தனது மகளைக் கொன்றதாக மாவட்ட போலிஸ் சூப்பரிண்டென்டன்ட் அஜய் குமார் தெரிவித்தார். தனது மகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து அவளைக் காப்பாற்ற முயன்றார் அந்தத் தாயார். ஆனால் சிறுமி மாண்டதாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.
சிறுமியின் தந்தை மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஏழு வயது மகனும் உள்ளார்.

