நாசா: விக்ரம் லேண்டர் காணவில்லை

நாசா: விக்ரம் லேண்டர் காணவில்லை

1 mins read
d39c127a-1010-4e03-a80e-833ca26e1be9
-

'சந்திரயான்-2'ன் விக்ரம் லேண்டர் விண்கலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனது அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'விக்ரம் லேண்டர்' பாகங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா கூறியுள்ளது.

இது குறித்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட நாசா, 'ரிகோனைசன்ஸ் ஆர்பிட்டர்' செயற்கைக் கோளால் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பைக் காட்டும் சில படங்களை அந்தப் பதிவில் இணைத்துள்ளது.

விக்ரம் விண்கலம் தரையிறங்கிய நிலவின் தென்துருவப் பகுதியில் இரவு தொடங்கியுள்ள நேரத்தில் அதனுடன் தொடர்புகொள்வதற்கான காலக்கெடு முடிந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் விக்ரம் கலனைத் தேட முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படும் என்றது நாசா.

விக்ரம் லேண்டர் தொடர்பில் ஏற்பட்ட தவறுகள் என்ன என்பதை தேசிய நிலையிலான செயற்குழு ஒன்று ஆராயும் என்று 'இஸ்ரோ' தலைவர் கே. சிவன் நேற்று தெரிவித்தார். " 'ககன்யான்' எனப்படும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு அடுத்ததாகக் கவனம் அளிக்கப்படும்," என்றார் திரு சிவன்.