திரிபுரா கோயில்களில் ஆடு வெட்ட தடை

திரிபுரா கோயில்களில் ஆடு வெட்ட தடை

1 mins read

புதுடெல்லி: திரிபுரா மாநிலத்தில் கோயில்களில் ஆடு பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. திரிபுராவில் 500 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற மாதா திரிபுரேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலின் சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம்.

இதற்கு மாநில அரசும் நிதி வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்றம், திரிபுரா மாநிலம் முழுவதும் கோயில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதித்தது. இதையடுத்து அரசாங்கம் வழங்கும் நிதியும் நிறுத்தப்பட உள்ளது.