தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்: நிதின் கட்கரி

தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்: நிதின் கட்கரி

1 mins read

காட்பாடி: காவிரித் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்தாலே தமிழகம்-கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்சினையே இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வேலூர் காட் பாடியில் தனியார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "காவிரித் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம்-கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்சினையே இருக்காது. காவிரிப் பிரச்சினையில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி எந்த முன்னேற்றமும் இல்லை, தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும். தூத்துக்குடியில் காற்று, சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்," என்று கூறினார்.