அருண் ஜெட்லி மனைவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி

அருண் ஜெட்லி மனைவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி

1 mins read
60526eb5-b48a-407f-a8cd-c83c8d04f86d
அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா (வலது). -

புதுடெல்லி: காலஞ்சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதாவை மாநிலங்களவை உறுப்பினராக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் தனது சிறப்பான பங்களிப்பை அருண் ஜெட்லி வழங்கியிருப்பதால் அவரது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது குடும்பத்தில் ஒருவரை மாநிலங்களவை எம்பியாக்க பாஜக மூத்த தலைவர்கள் பலரும் விரும்புவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா காஷ்மீரைச் சேர்ந்தவராவார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா பாஜகவுக்கு மிகவும் பயன்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவும் கருதுவதாகத் தெரிகிறது.

மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை களால் காஷ்மீர் மக்கள் எந்த வகையில் பயனடைய முடியும் என சங்கீதா மூலம் பிரசாரம் செய்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்று அமித்ஷா கருதுவதாகவும் ஊடகத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்