புதுடெல்லி: சுற்றுலாத் துறையில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநில அரசுக்கு விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் விருதை வழங்கி பேசிய துணை அதிபர் வெங்கையா நாயுடு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோருக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ''சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது போன்ற விஷயங்களில், நம் நாடு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவுக்கு வரும் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது,'' என்றார் வெங்கையா நாயுடு.

