சிங்கப்பூர் இந்திய ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற குழு

சிங்கப்பூர் இந்திய ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற குழு

1 mins read
96a87878-6eca-4b82-a146-8c145a94be56
(படம்: தமிழவேல்) -

- சென்னையிலிருந்து தமிழவேல், செய்தி ஆசிரியர்

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) ஐஐடி மட்ராஸ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய முதல் தொழில்நுட்பப் போட்டி கடந்த ஆண்டு சிங்கப்பூரின் என்டியு-வில் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த இந்த போட்டிக்கு திரு மோடி சிறப்பு விருந்தினராக அப்போது சிங்கப்பூர் வந்திருந்தார்.

இந்த ஆண்டு ஐஐடி மட்ராஸில் நடைபெறும் இரண்டாவது 'ஹேக்கத்தான்' போட்டியின் பரிசளிப்பு விழாவில் திரு ஓங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் திரு மோடியும் கலந்துகொண்டார்.