உயிருடன் புதைப்பேன்: ஐஏஎஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்பி

உயிருடன் புதைப்பேன்: ஐஏஎஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்பி

1 mins read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா தொகுதியின் பாஜக எம்.பி.யான ஜனார்த்தன் மிஸ்ரா, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை 'உயிரோடு புதைத்துவிடுவேன்' என மிரட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புகளில் தங்கியுள்ளோரை அங்கிருந்து வெளியேற்றாமல் இருக்க அந்த அதிகாரி அவர்களிடம் லஞ்சம் பெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதையடுத்து, தான் வரும் முன்னர் அந்த அதிகாரியை எவரேனும் உயிரோடு புதைத்துவிட்டால் அதற்குத் தானே பொறுப்பேற்று, அவ்விடத்தில் ஓர் அறிவிப்புப் பலகையை வைக்கத் தயாராக இருப்பதாகவும் மிஸ்ரா மிரட்டியுள்ளார்.