ஆந்திரா: 1.26 லட்சம் பேருக்கு ஒரே நாளில் அரசு வேலை

ஆந்திரா: 1.26 லட்சம் பேருக்கு ஒரே நாளில் அரசு வேலை

1 mins read

அமராவதி: ஒரே நாளில் 1.26 லட்சம் புதிய பேரை ஊழியர்களாக நியமித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

கிராம செயலகங்கள், நகர்ப்புற வார்டு செயலகங்களில் இந்த ஊழியர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

புதிய நிர்வாக நடைமுறையாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது ஆந்திர அரசு. இந்தச் செயலகங்களில் 500 வகையான பொதுச் சேவைகள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இச்செயலகங்களில் பணியாற்றுவதற்கான நிரந்தர ஊழியர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, அண்மையில் ஆந்திர அரசு எழுத்துத் தேர்வு நடத்தியது.

தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் இருந்து 1.26 லட்சம் பேர் அரசுப் பணிக்கு தேர்வாகி உள்ளனர்.

தேர்வான அனைவருக்கும் ஒரே நாளில் பணி நியமான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான சேவைகளும், நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நாட்-டின் எந்த மாநி-லத்-தி-லும் ஒரே நாளில் 1.26 லட்-சம் அரசு ஊழி-யர்-கள் நிய-மிக்-கப்-பட்-ட-தில்லை.