இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், பிணைக்கு மீண்டும் விண்ணப்பிக்க முயன்றதை அடுத்து, அந்நாட்டின் உச்ச நீதிபதி ரஞ்சன் கோகோய் அது குறித்து முடிவெடுப்பார் என்று அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்குப் பிணை கொடுக்க மறுத்த, தற்போது சிறையில் இருக்கும் திரு சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
ஐஎன்எஸ் ஊழல் வழக்கின் தொடர்பில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் திரு சிதம்பரம் டெல்லியின் திகார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

