பதாகை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மோடிக்கு கமல் வேண்டுகோள்

பதாகை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மோடிக்கு கமல் வேண்டுகோள்

1 mins read
e4f8f92d-4d87-41c9-874b-00055a1ecbdd
-

சீர்குலைவான பதாகை கலாசாரத்தை நிறுத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திரு மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இம்மாத இறுதியில் பழம்பெரும் சிற்பங்களைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்போகும் சந்திப்பையொட்டிய பதாகைகளை எழுப்புவதற்காகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் கேட்டதை அடுத்து கமல்ஹாசன் இவ்வாறு கேட்டுள்ளார்.

பதாகை விழுந்ததால் 23 வயது சுபஸ்ரீ மாண்டது பற்றி பிரதமர் மோடிக்கு நினைவூட்டிய கமல்ஹாசன், அந்தப் பெண்ணின் மரணத்திற்காகத் தமிழ்நாட்டு மக்கள் கண்கலங்கும் நேரத்தில் அரசாங்கம் அவரது படத்தைக் காட்டும் புதிய பதாகைகளை எழுப்பும் வேடிக்கையைச் சுட்டினார். சீர்குலைவான இந்தப் பதாகை கலாசாரமே வேண்டாம் எனக் கூறிய கமல்ஹாசன், இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியைத் திரு மோடியே வழிநடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பல்லாண்டுகளாகத் திரைத்துறையில் இருந்து இதே பதாகை கலாசாரத்தால் பயன்பெற்ற கமல் இந்தத் தருணத்தில் மட்டும் சீர்குலைவு பற்றி பேசுவது வேடிக்கையாக இருப்பதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.