ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுரேஷ் குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தமது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். 50 வயதான அவர் தனியே வசித்து வந்தார். அவரது மகன் அமெரிக்காவிலும், மனைவி மற்றும் மகள் சென்னையிலும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது அலுவலக நண்பர்கள் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷ் குமார் வசித்த வீட்டின் கதவை உடைத்து போலிசார் உள்ளே சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். கொள்ளை முயற்சியின்போது அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் போலிசார் சந்தேகிக்கின்றனர்.

