பெங்களூரு: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிடவில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு உயிரிழந்து விட்டது என நினைக்கத் தோன்றுவதாக அவர் கூறியுள்ளார். "மோடி இந்த நாட்டிற்குப் பிரதமராக இருப்பது ஒரு மோசமான சூழ்நிலை. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மோடியால் தீர்வு காண முடியவில்லை. அவரை இந்தியாவின் தந்தை என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை எனத் தோன்றுகிறது," என்று சித்தராமையா மேலும் கூறியுள்ளார்.
மத்திய அரசு உயிரிழந்துவிட்டதாக சித்தராமையா சாடல்
1 mins read

