காந்தியின் அஸ்தி திருட்டு, புகைப்படம் சேதம்

காந்தியின் அஸ்தி திருட்டு, புகைப்படம் சேதம்

1 mins read
d7855802-c20e-4107-b42d-ba255d2ba08f
-

இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் அஸ்தி, அவரது 150ஆவது ஜெயந்தியன்று திருடப்பட்டுள்ளதாக இந்திய போலிசார் தெரிவித்துள்ளனர்.

1948ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள நினைவாலயம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது அஸ்தி தற்போது காணவில்லை. அஸ்தியைத் திருடியவர்கள் காந்தியின் புகைப்படங்கள் மீது 'துரோகி' என்ற வாசகத்தையும் கிறுக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக ரெவா மாவட்ட போலிசார் தெரிவித்தனர்.

மகாத்மா காந்தியையும் அகிம்சை சார்ந்த கொள்கையையும் இந்தியர்கள் பலர் போற்றினாலும் சில அடிப்படைவாதிகள் அவர் மீது காழ்ப்புணர்வைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தானின் உருவாக்கத்திற்கு காந்தி முக்கிய காரணம் என ஒரு தரப்பு அவர்மீது இன்றுவரை பழி சுமத்துகிறது.

1948ஆம் ஆண்டில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.