காந்தி பிறந்த நாளில் 611 கைதிகள் விடுதலை

காந்தி பிறந்த நாளில் 611 கைதிகள் விடுதலை

1 mins read
cd9906f5-b349-4c0f-a17f-a91b52bf9164
-

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சிறைக் கைதிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 919 கைதிகளும் 2வது கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி 505 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் 611 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கொலை, வன்கொடுமை, போக்சோ, ஊழல், பயங்கர வாதம் தொடர்புடைய வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இந்த சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை.