ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லாவும் அவரது தந்தை பரூக் அப்துல்லாவும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இரண்டு மாதங்களாக வீட்டுக் காவலில் இருக்கும் உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லாவைச் சந்திக்க தேசிய மாநாட்டு கட்சி தரப்பில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையை ஏற்று ஆளுநர் அனுமதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந;து தேசிய மாநாட்டுக் கட்சியின் ஐம்மு மாகாணத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட குழு நேற்றுக் காலை பரூக் அப்துல்லாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியது.

