முதல்வரை கழற்றிவிட காய் நகர்த்தும் ஷா

முதல்வரை கழற்றிவிட காய் நகர்த்தும் ஷா

1 mins read

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது தமது வேட்பு மனுவுடன் தேர்தலில் பட்னவிஸ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தபோது, தன் மீது இருந்த இரண்டு வழக்குகளை அவர் குறிப்பிடவில்லை.

இது குறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமித் ஷாவின் தூண்டுதல் இருக்குமோ என பட்னவிஸ் ஆதரவாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.

இந்த விசாரணையால் பட்னவிசுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றாலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் மீதான விசாரணை சரியாக வராது என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அதோடு, மகாராஷ்டிராவில் ஒரு மராத்தாவை முதல்வராக்க அமித் ஷா திட்டமிடுகிறார் எனவும் சொல்லப்படுகிறது. பட்னவிஸ் மராத்தா இனத்தைச் சார்ந்தவர் அல்ல. சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் பட்னவிசை மீண்டும் முதல்வராக்காமல் அவரை மத்திய அமைச்சராக்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.